பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அருகே கீழ்மத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். செந்தில்குமார் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு சுசிலா என்ற மனைவி இருந்துள்ளார். சுசிலா வீட்டை விட்டு சென்றதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இதில், செந்தில்குமார் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளி நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.