வாரிசு, துணிவு என இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாக இருப்பதால், வரும் தைப்பொங்கல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கப்போகிறது. ஒரே நாளில் வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படங்களையும் பார்த்து பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றன. அதற்கேற்ப இரண்டு படத்தின் அப்டேட்டுகளும் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை மெய்சிலர்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.
வாரிசு vs துணிவு
துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் நிலையில், துணிவு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. இருப்பினும் தியேட்டர் பிரச்சனை காரணமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டில் சென்னை, கோயம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் வாரிசு படத்தின் தியேட்டர் உரிமையை ரெட்ஜெயண்ட் பெற்றுவிட்டது. இதனால், வாரிசு vs துணிவு பொங்கல் விழாவில் மோதுவது உறுதியாகிவிட்டது.
புரோமோஷன்கள் ஸ்டார்ட்
இரண்டு படங்களுக்கு புரோமோஷன்களும் முன்பதிவுகளும் வெளிநாட்டில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இன்னும் சில பிஸ்னஸ் பேச்சுவார்த்தைகள் இருப்பதால் கூடிய விரைவில் வாரிசு படக்குழு மற்றும் துணிவு படக்குழு சுழன்றடித்து புரோமோஷனில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து துணிவு பட இயக்குநர் ஹெச். வினோத் பேசும்போது, இதுவரை பார்த்திராத கெட்டப்பில் அஜித் துணிவில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அஜித் கதாப்பாத்திரம்
வங்கிக் கொள்ளையை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அஜித் மோசமான கெட்டவனாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹெச். வினோத் பேசும்போது, அஜித்தின் வித்தியாசமான ஒரு சில புகைப்படங்களுக்கே ரசிகர்களின் வரவேற்பு இந்தளவுக்கு இருக்கிறது. புரோமோஷன்களுக்காக சில வீடியோக்களை வெளியிட இருக்கிறோம். அதனை பார்த்தபிறகு ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? என என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.
முதலில் வாரிசு பார்ப்பேன்
மேலும், பொங்கல் விழாவின்போது வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படங்களும் வெளியாக இருக்கும் நிலையில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, வாரிசு படத்தை தான் முதலில் பார்ப்பேன் என தெரிவித்துள்ளார். இயக்குநராக துணிவு படத்தை ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டேன் என தெரிவித்துள்ள அவர், வாரிசு படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.