'மனுஷன் வாழ்றான்யா' ; பிரணவ் மோகன்லாலுக்கு குவியும் பாராட்டுக்கள்

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் தனது தந்தையைப் போலவே நடிகராக மாறி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது ஆசை டைரக்ஷன் பக்கம் இருந்ததால், ஆரம்பத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக சில படங்களில் பணியாற்றினார். ஆனாலும் காலம் இவரை நடிப்பு பக்கம் அழைத்து வந்து விட்டது. அதேசமயம் மற்ற வாரிசு நடிகர்களான துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றவர்கள் போல அடுத்தடுத்து படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல், வாழ்க்கையை தான் விரும்பிய போக்கில் வாழ்ந்து வருகிறார் பிரணவ் மோகன்லால்.

குறிப்பாக இந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் கூட அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் இல்லாமல் தேசாந்திரி போல வெளிநாடுகளில் ஜாலியாக சுற்றி திரிகிறார் பிரணவ் மோகன்லால். அதுகுறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி லைகுக்களை அள்ளி வருகிறது.

அதில், பிரணவ் மலை உச்சியிலிருந்து நீருக்குள் தாவுகிறார்.. பாறைப்பகுதிகளில் டென்ட் அடித்து தங்கியிருக்கிறார்.. மிக உயரமான மரத்தின் மீதும் எந்த பிடிப்பும் இல்லாத செங்குத்தான பாறை மீதும் ரிஸ்க் எடுத்து ஏறுகிறார். அந்தப்பகுதியிலுள்ள குயவர்களிடம் மண்பாண்டம் செய்யும் தொழிலை கற்றுக் கொள்கிறார்.

இப்படி அவரது ஜாலியான வாழ்க்கை அந்த வீடியோவில் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் வெளியான இந்த வீடியோ கிட்டத்தட்ட இதுவரை 3 லட்சம் லைக்குகளை தாண்டி பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மனுஷன் என்னமா வாழ்க்கையை வாழ்றான்யா என்று தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.