புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் மொட்டை மாடியில் இருந்து 2 வயது குழந்தையை தந்தை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு டெல்லி கல்காஜி பகுதியை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அவர், கல்காஜியில் உள்ள வீட்டில் பாட்டி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் குடிபோதையில் பூஜாவின் கணவர் வீட்டிற்கு வந்து தகராறி ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பூஜாவின் கணவர் வீட்டில் இருந்த குழந்தையை தூக்கிகொண்டு மொட்டை மாடிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அவரை பின் தொடர்ந்து பூஜை செல்வதற்குள், குழந்தையை கீழே வீசிவிட்டு அவரும் கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மத்திய டெல்லியில் நேற்று ஆசிரியர் ஒருவர் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை முதல் மாடியில் இருந்து தூக்கி எறிந்த சம்பவம் நடந்தேறிய அதே நாளில் குழந்தையை தந்தை கீழே தூக்கி எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.