மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் நவம்பரில் குளிர் காலம் துவங்கியும் அவ்வப்போது பெய்த மழையால் குளிர் இன்றி காணப்பட்டது.
இதனிடையே நவ. 21ல் காலையில் அதிகபட்ச வெப்ப நிலை 9 டிகிரி, 22ல் 6 டிகிரி செல்சியசாக இருந்தது. அதன்பிறகு வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ்சை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை உட்பட பல்வேறு காரணங்களால் காலநிலை மாறியது.
இந்நிலையில் டிச.8ல் வெப்ப நிலை 5டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் வாட்டியது. அதன்பிறகு ‘மாண்டஸ் ‘புயலால் மழை பெய்ததால் வழக்கத்தை விட குளிர் அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களாக வெயில் அடித்த நிலையில் ஒருவார இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் மீண்டும் குளிர் அதிகரித்து நடுக்கத்தை ஏற்படுத்தியது.
மூணாறில் நேற்று காலை அதிகபட்ச வெப்ப நிலை 6 டிகிரி செல்சியஸ்சாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் காலையில் மேகங்கள் சூழ்ந்து ரம்யமாக காணப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement