
வரலட்சுமி நடிக்கும் புதிய படம்! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் வரலட்சுமி, தெலுங்கில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா படத்தில் நெகட்டீவ் வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ள ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டிருக்கிறார்.
அந்த படத்திற்கு ‛வி3' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அமுதவாணன் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அலென் ஜெபஸ்டின் என்பவர் இசையமைக்கிறார். திரில்லர் கதையில் உருவாகி வரும் ‛வி 3' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.