அசம்கர் : உத்தர பிரதேசத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர், சமூக வலைதளங்கள் உதவியுடன் குடும்பத்தினருடன் சேர்ந்தார்.
உ.பி., மாநிலம், அசம்கர் மாவட்டத்தில் உள்ள கோதவ் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மவுரியா. இவரது மாமா ஜிலேஜித் மவுரியா 1996ல், தன் 35வது வயதில் காணாமல் போனார். பேச்சு குறைபாடு கொண்ட தன் மாமாவை, சந்திரசேகர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை
இந்நிலையில், அவர் சமூக வலைதளங்களில் தன் மாமா குறித்து அடிக்கடி பதிவிட்டு வந்தார். சில நாட்களுக்கு முன், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ஹத்வா கிராம தலைவர் வீட்டில், ஜிலேஜித் இருப்பதாக சமூக வலைதளம் வாயிலாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று, ஜிலேஜித்தை மீட்டு வந்தனர். இத்தனை ஆண்டுகளாக ஜிலேஜித்தை பராமரித்து வந்த கிராம தலைவருக்கும், அவர் இருப்பிடம் பற்றி அறிய உதவிய சமூக வலை தளத்துக்கும் சந்திரசேகர் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement