FIFA WorldCup 2022 Final: மெஸ்ஸியின் அதிரடியில் மூன்றாவது முறையாக சாம்பியனானது அர்ஜெண்டினா!

22வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி காத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி தொடங்கிய கோலாகலமாக நடைப்பெற்று வந்தது. இதன் உச்சகட்டமாக பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி கத்தாரின் லுசைல் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது.

கால்பந்து போட்டியின் ஜாம்பவனான மெஸ்சியின் கடைசிப்போட்டி இது. எனவே இப்போட்டி உலகமுழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. பரபரப்பாகத் தொடங்கிய ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் டி மரியா சம்பாதித்துக் கொடுத்த பெனால்டி மூலம் மெஸ்சி ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அர்ஜென்டினாவை முன்னிலை எடுக்க செய்தார்.

மெஸ்சி

இதைத்தொடர்ந்து 36வது நிமிடத்தில் டி மரியா அர்ஜென்டினாவின் இரண்டாவது கோலை அடித்து 2-0 என்ற கணக்கில் அணியை மேலும் முன்னிலை பெற வைத்தார். இது ஒரு அட்டகாசமான கோல் ஆகும். அர்ஜெண்டினாவின் எல்கைக்குள் இருந்து நேர்த்தியாக அடுத்தடுத்த வீரர்களால் பந்து கடத்தப்பட்டு ஃபைனல் தேர்டில் மெக்கலிஸ்டர் மற்றும் டி மரியாவின் கூட்டு முயற்சியால் அதிரடியாக கோலாக மாற்றப்பட்டது.

டி மரியா

இதன்பிறகு எவ்வளவு

ஆட்டத்தை மாற்றிய எம்பாப்பே!

பின்னர், 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 92 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து போட்டியை சமன் செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது ஆட்டம். அதன் பின் எக்ஸ்ட்ரா நேரம் வழங்கப்பட்டது.

எம்பாப்பே

அர்ஜெண்டினாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தை எம்பாப்பே அப்படியே மாற்றினார். 2 கோல்களை அடுத்தடுத்து அடித்து போட்டியை சமமாக்கினார். போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. அதிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. மெஸ்ஸி ஒரு கோல் எம்பாப்பே ஒரு கோல் அடிக்க போட்டி மீண்டும் டை ஆனது. இதனால் பெனால்டி சூட் அவுட்டுக்கு ஆட்டம் சென்றது. அதில் அர்ஜெண்டினா 4-2 என வென்றது. இதன் மூலம் 1978, 1986 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.