ஓசூர்: ஓசூரில் ஆதியோகி சிவன் ரதம். சிவபெருமானே மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடுத்து செல்லும் ரத ஊர்வலம் துவங்கியது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று கோயமுத்தூர் வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிவபெருமான் முன்பு மகாசிவராத்திரி பெருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக இறை அன்பர்களை அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி ஆன சிவபெருமானே ஒவ்வொருவரையும் அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி சிவன் ரதத்தில் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ரத ஊர்வலமாக துவங்கி சென்றது.
முன்னதாக ராமநாயக்கன் ஏரி அருகே அமைந்துள்ள மக்கள் பூங்காவின் முன்பு குருபூஜையுடன் துவங்கியது. இந்த சிறப்பு பூஜையில், ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ மனோகரன், சத்யவாகீஸ்வரன், சுதா நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் சிவபெருமானை வழிபட்டு சென்றனர்.
இதில், சிவனடியார்கள் அமைப்பின் சார்பில் சிவபெருமானின் கைலாய வாத்தியம் மேளங்கள் முழங்க, ஆண்கள் பெண்கள் என பக்தர்கள் நடனம் ஆடியது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்த ரத ஊர்வலம் ஆனது ஓசூர் மாநகரில் இரண்டு நாட்கள் முழுவதுமாக ஊர்வலம் சென்று இறையன்பர்களை அழைப்பு விடுப்பதற்காக ரத ஊர்வலம் சென்றது. ரத ஊர்வலத்திற்கு காவல்துறையினர் முழு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
பின்பு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் செல்ல உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நரசிம்மன் தெரிவித்தார்.
மேலும் சிவனுடன் ஓர் இரவு என்ற ஒரு தத்துவத்தை முன்வைத்து கொண்டாடப்பட உள்ள மகா சிவராத்திரி திருவிழாவில் இறை அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஈசனின் அருள் பெற வேண்டுமென்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.