ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. முதல் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக கலவையான கமெண்ட்ஸ்களையே பெற்றன. இதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. எனவே ஏகே ரசிகர்கள் படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வினோத்தின் சமீபத்திய பேட்டிகளும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
பொங்கலுக்கு படம் வெளியாகவிருக்கிறது. விஜய் நடித்த வாரிசு படமும் துணிவு படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதால் இப்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மோதல் களைகட்ட தொடங்கியுள்ளது. அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
இதற்கிடையே துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா படல் சமீபத்தில் வெளியானது. முதல்முறையாக அஜித்துக்கு ஜிப்ரான் இசையமைத்தாலும் அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
#KasethanKadavulada out tomorrow at 2 pm
Stay Tuned#ThunivuSecondSingle#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@BoneyKapoor @ZeeStudios_ @VaisaghOfficial @Udhaystalin @BayViewProjOffl @SureshChandraa @ProRekha @zeemusicsouth pic.twitter.com/XLJVdyxRYS
— Ghibran (@GhibranOfficial) December 17, 2022
வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலுக்கு பிறகு அஜித்துக்கு ஒரு வெறித்தனமான பாடல் அமைந்திருப்பதாகவும், பக்கா வைப் மெட்டீரியல் எனவும் ஏகே ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பெரும்பாலானவர்களுக்கு பாடல் பிடித்திருக்கிறது.
இந்நிலையில் துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிளான காசேதான் கடவுளடா இன்று வெளியாகுமென்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரண்டாஅது பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. சில்லா சில்லா பாடலை எழுதிய வைசாக்தான் இந்தப் பாடலையும் எழுதியிருக்கிறார். முதல் பாடலைப் போலவே இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.