அஜித்தை பின்பற்றும் விஜய்…? வருகிறது வாரிசு படத்தின் 3ஆவது பாடல்!

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு. பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்துவருகிறது. 

இருப்பினும், படம் குறித்த எதிர்பார்ப்பு ஒரு சதவீதம் கூட குறையவில்லை என்றுதான் கூற வேண்டும். வரும் டிச. 23ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், வாரிசு படம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளால் அவரின் மேடை பேச்சு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 

ஆனால், அதுவரை ரசிகர்கள் கொண்டாடுவதற்கு படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இப்பாடல் தாய் பாசம் சார்ந்த பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த அறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில்,”அம்மா, இது உங்களுக்காக – வாரிசின் ஆத்மா” (It’s for you Amma – Soul of Varisu) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடகி சித்ரா பாடியுள்ளார்.

வழக்கமாக, விஜய் படத்தில் குடும்பம் சார்ந்த கருத்துகள் அதிகம் இடம்பெறும் என்றாலும், இந்த பாடல் மூலம் அஜித்தை விஜய் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, அஜித் நடிப்பில் இந்தாண்டு வெளியான வலிமை படத்தில் இடம்பெற்ற தாய் பாசம் சார்ந்த பாடல் ஹிட் அடித்ததை தொடர்ந்து, அதை தனது படத்திலும் விஜய் பயன்படுத்துவதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். 

ஆனால், தமிழ் சினிமாவில் தாய் பாசம் தொடங்கி தங்கை பாசம் வரை பல நடிகர்களும் பல பாடல்களில் நடித்துவிட்ட நிலையில், இதெல்லாம் கேட்கவே வேடிக்கையாக உள்ளது என பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

எது எப்படியோ, ரஞ்சிதமே ரஞ்சிதேமே, தீ தளபதி என்ற குத்து பாடல்களுக்கு அடுத்து, தாய் பாசம் சார்ந்த பாடல் வெளியாக உள்ளது தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளர் தமன் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பாடல்களை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு எனவும் கூறுகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.