இந்தியாவில் நிகழ்ந்துள்ள தொழில்நுட்ப மாற்றம் ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை ட்வீட்

புதுடெல்லி: இந்தியாவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நிகழ்ந்துள்ள மாற்றம் ஊக்கமளிக்கிறது என பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. அவருக்கு எனது நன்றி. உங்கள் (பிரதமர் மோடி) தலைமையில், இந்தியாவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது ஊக்கமளிக்கிறது. வலிமையான நமது கூட்டு தொடர்வதை எதிர்பார்க்கிறேன். இந்தியாவின் ஜி20 தலைமையின் மூலம் அனைவருக்கும் பலனளிக்கும் இணையத் தொடர்பை வழங்குவதையும் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


— Sundar Pichai (@sundarpichai) December 19, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.