பொங்கலுக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்த உள்ளார். அந்த வகையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். அதேபோல் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு திட்டம் தொடர்பாகவும் முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்களுக்கு பரிசாக ரூ.1,000 வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகை ரொக்கமாக வழங்கலாமா அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாமா என ஆலோசனை நடத்த கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தின் முடிவில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.