உக்ரைனின் பாக்முட் நகரம் மீது ரஷ்ய படைகள் பொழிந்த ஏவுகணை மழையால், ஏராளமான கட்டங்கள் தீப்பற்றி எரிந்து, அந்நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள டோனட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Luhansk) பிராந்தியங்களை இணைப்பதுடன், உக்ரைனின் பல்வேறு மாகாணங்கள் மீதும் தாக்குதல் நிகழ்த்த முடியும் என்பதால் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் மாதக்கணக்கில் போராடிவருகின்றன.
இருந்தபோதும், உக்ரைன் ராணுவம் பெரியளவில் பின்வாங்காமல் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றன.