`உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லாமல் 2022 முடிவதா?'- ஆகாயத்தில் பறந்தபடி டாம் குரூஸ் பதிவு

ஹாலிவுட் ரசிகர்களை மட்டுமல்ல; தனது ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கட்டியிழுப்பதில் டாம் குரூஸ் மிகப்பெரிய எக்ஸ்பெர்ட். ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளியான “டாப் கன் மேவரிக்” திரைப்படமும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உலகளவில் மாபெரும் வெற்றியடைந்த “டாப் கன் மேவரிக்” ஐ ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர் விமானத்திலிருந்து குதித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் நட்சத்திரம் டாம் குரூஸ், தற்போது தென்னாப்பிரிக்காவில் “டாப் கன்: டெட் ரெக்கனிங் பார்ட் 1 &2” படப்பிடிப்பில் இருக்கிறார். அப்போது விமானத்திலிருந்து குதித்து, பறந்தவண்ணமாகவே, “Hey Everyone! இங்கே நாங்கள் தென்னாப்பிரிக்காவை அசத்திவருகிறோம். நாங்கள் ‘மிஷன்: இம்பாசிபிள் – டெட் ரெக்கனிங்” பாகம் 1 மற்றும் 2 படமாக்குகிறோம். திரையரங்குகளுக்கு வந்த ‘டாப் கன்: மேவரிக்’ ஐ ஆதரித்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லாமல் இந்த ஆண்டு முடிவடைவதை நான் விரும்பவில்லை” என்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

image

அதுமட்டுமின்றி அவரது சமீபத்திய திரைப்படமான “டாப் கன் மேவரிக்” இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் OTT இல் வெளியாகிறது. டிசம்பர் 26 முதல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  Amazon Prime-இல் பார்க்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

image

1986 இன் “டாப் கன்” படத்தின் தொடர்ச்சியாக “டாப் கன் மேவரிக்” இந்த ஆண்டு மே 27அன்று திரையரங்குகளில் வெளியாகி, 1.4 பில்லியினுக்கும் மேல் சம்பாதித்தது. இது 2022 இல் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படமாகவும் அமைந்தது. அதனால் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-அருணா ஆறுச்சாமி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.