டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.3,001 கோடி பேரிடர் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. 2019 – 20ல் ரூ.825 கோடி, 2020 -21ல் ரூ.1,008, 2021- 22ல் ரூ.1,088 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.8,676.6 கோடி பேரிடர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.