கடலூரில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்..!!

கடலூர்: கடலூரில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்காக பல கிராமங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகளுடன் மக்கள் வருகின்றனர். சமீபகாலமாக மனைப்பட்டா வேண்டிதான் அதிகமான மக்கள் கூடுகிறார்கள்.ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 100 மனைப்பட்டா இல்லாமல் இருப்பதாகவும், இதனால் ஒரே வீட்டில் 5 குடும்பம் முதல் 6 குடும்பங்கள் வரை வசித்து வருவதாகவும்,  போதுமான கழிப்பறை வசதி இல்லாததும்  தான் காரணமாக கூறப்படுகிறது.

பல கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக ஆட்சியர் அலுவலகம் முன் வருவதற்கான முக்கிய காரணமாகவும் மனைப்பட்டா இருப்பதாக விருத்தாச்சலம் அருகே உள்ள பரவலூர் கிராமமக்கள் கூறுகின்றனர். இதே போல் கடலூர் அருகே செம்மம்குப்பம், குரிஞ்சுப்பாடி என பல கிராமங்களில் இருந்தும், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் குவிகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர் தெரிவித்ததாவது, எங்களுக்கு தனி தனியாக மனைபட்டா வழங்க வேண்டும். இதற்காக நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வாக்கு  கேக்க வருபவர்கள் எங்களிடம் வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் அந்த வாக்குறுதி கடந்த 60 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.