வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்றைய உலக கால்பந்து பைனலின்போது கூகுளில் அதிகம் பேர் தேடியதாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று லுசெய்ல் மைதானத்தில் நடந்த பைனலில் அர்ஜென்டினா(உலக ரேங்கிங்கில் 3வது இடம்), பிரான்ஸ்(4வது இடம்) அணிகள் மோதின.
இதில் உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. அதன்பிறகு பெனால்டி பகுதியில் 4-2 என ஆர்ஜென்டீனா வென்று கால்பந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இது குறித்து தகவல்கள் இணையதளத்தில் வைரலாகியது.

இந்நிலையில், இது குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றைய போட்டியின்போது, உலக கால்பந்து பைனல் குறித்து அதிகம் பேர் தேடியுள்ளனர்.
* உலக கால்பந்து பைனல் குறித்த தேடல் தான் கடந்த 25 ஆண்டுகளில் அதிகமான டிராபிக்கை பதிவு செய்துள்ளது. உலகத்தில் உள்ள அனைவரும் ஒன்றைப் பற்றி தேடுவது போல இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement