சென்னை மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் வீட்டின் பின்புறம் உள்ள கருமாரி கொட்டகையில் சாராயம் விற்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி, துணை தலைமை காவலர் தீபன் மற்றும் சக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து, அவர் வைத்திருந்த இருபது லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கரவாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோன்று, நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் வீட்டின் எதிரே சாராயம் விற்பனை செய்து கொண்டிருதார். அங்கு சென்ற போலீசார் அவரிடம் இருந்து இருபது சாராயப்பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.