வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை முடக்கினார் எலான் மஸ்க். பிற சமூக வலைதளங்களின் பதிவுகளை டுவிட்டரில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறு பதிவு செய்வதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து , அது போன்ற கணக்குகளை முடக்கப் போவதாக தெரிவித்தார்.
![]() |
இந்நிலையில் தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டு பயனர்களை கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தார். பெரும்பாலான பயனர்கள் எலான் மஸ்க் பதவி விலக வேண்டும் என பதில் அளித்துள்ளனர். இதனால் அவர் தலைமை செயல் அதிகாரி பதவியில் நீடிப்பாரா? அல்லது வேறு ஏதேனும் அதிரடி அறிவிப்பை வெளியிடுவாரா என தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement