தேர்தல் ஆணைக்குழு ஒரு சுதந்திரமான ஒரு பிரிவாகும். அதற்கு தேர்தல்களை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் (18) ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை தேசிய தேர்தல் ஆணைக்குழு நாளை (20) கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.