ஹைதராபாத் :தெலுங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் ‘மொபைல் போனில்’ பேசிய 17 வயது சிறுமி, வளர்ப்பு தந்தையால் கொலை செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் வசிப்பவர் முகமது தவுபிக். இவருடைய வளர்ப்பு மகள் யாஸ்மின் உன்னிசா, 17. இந்த சிறுமி நேற்று முன்தினம் நள்ளிரவில் மொபைல் போனில் ஒருவருடன் பேசியுள்ளார். இதைக் கவனித்த முகமது தவுபிக், யாருடன் பேசுகிறாய் என கூறி கடுமையாக திட்டியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த முகமது தவுபிக், யாஸ்மின் உன்னிசாவை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement