ராஜ குடும்பம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கும் வீட்டில் ஆவிகள்…


ராஜ குடும்பத்தினர் வாழும் பல வீடுகளில் ஆவிகள் குறித்து உலவும் கதைகள் உண்டு. இன்னும் சில நாட்களில் ராஜ குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கும் வீட்டைக் குறித்தும் ஆவிக்கதைகள் உலவுகின்றன. 

ராஜ குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட இருக்கும் வீடு

Sandringham House என்னும் வீட்டில்தான் ராஜ குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கிறார்கள். அந்த வீட்டின் ஒரு அறைக்குள் நுழைய அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் பயப்பட்டதால், மகாராணியார் பாதிரியார் ஒருவரை அழைத்து தனியாக ஒரு பிரார்த்தனை நடத்திய விடயம் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
 

ராஜ குடும்பம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கும் வீட்டில் ஆவிகள்... | Royal Family S Home To Celebrate Christmas

Image: 2019 Mark Cuthbert

மன்னரையே திகிலடைய வைத்த சம்பவம் 

மன்னர் சார்லஸ் இளவரசராக இருக்கும்போது, ஒருமுறை அவரும் அவரது உதவியாளர் ஒருவரும் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் சென்றுள்ளார்கள். அஙிருந்த சில ஓவியங்களை பார்வையிட்டுக்கொண்டிருந்திருக்கிறார் சார்லஸ். 

ராஜ குடும்பம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கும் வீட்டில் ஆவிகள்... | Royal Family S Home To Celebrate Christmas

Image: 2013 Georges De Keerle

அப்போது, அந்த அறையில் அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லாத நிலையிலும், மூன்றாவதாக ஒரு ஆள் அவர்களுக்குப் பின்னால் நிற்பதை இருவருமே உணர, ஐயையோ என சத்தமிட்டபடி ஒரு ஓவியத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு உடனே அந்த அறையிலிருந்து வெளியேறிவிட்டாராம் சார்லஸ்.

அந்த வீட்டில்தான் இப்போது ராஜ குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

ராஜ குடும்பம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கும் வீட்டில் ஆவிகள்... | Royal Family S Home To Celebrate Christmas

Image: 2017 Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.