சோன்பத்ரா: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் அஜய் ராய் சோன்பத்ராவில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ‘அமைச்சர் ஸ்மிருதி இரானி எப்போதாவது இங்கு வந்துவிட்டு சென்று விடுகிறார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கையாகும்” என்று கூறி ஸ்மிருதி இரானி தொகுதிக்கு வந்துவிட்டு செல்வது தொடர்பாக ஆபாசமாக அஜய்ராஜ் வர்ணித்திருந்தார். இதற்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே லக்னோவில் கூறுகையில்,‘‘நாட்டிற்கு பெண் பிரதமரை கொடுத்த கட்சியை சேர்ந்த ஒரு தலைவரின் இத்தகைய கருத்து நிச்சயமாக வெட்ககேடானது. காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்தும் மொழி எப்போதும் பெண்களுக்கு எதிரானது” என்றார்.
