லக்னோ: சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் 37-வது வருடாந்திர மாநாடு உ.பி. தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இம்மாநாட்டில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உலகின் மிகப் பழமையான காசி (வாரணாசி) நகரம் நம்மிடம் உள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் புதிய வளாகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. முன்னதாக, ஆண்டுக்கு 1 கோடி பேர் வாரணாசி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சாவன் மாதத்தில் மட்டும் வாரணாசிக்கு ஒரு கோடி பேர் வந்துள்ளனர்.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் 2024-ல் நிறைவடையும்போது இங்கு ஆன்மிக சுற்றுலா வருவோர் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.