சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் 21, 22-ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக் கூடும். இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்த வரை இன்று வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஓரிரு இடங்களில்லேசான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மன்னார் வளைகுடா, தமிழககடலோரப் பகுதிகள், அதனைஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 23-ம் தேதி சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக் கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.