இன்று ஒருநாள் பொது விடுமுறை… அர்ஜென்டினா World Cup வெற்றியை கொண்டாட வேற லெவல் ஏற்பாடு!

38 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை அர்ஜென்டினா வென்றது தான், சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியொரு இறுதிப் போட்டியை வாழ்நாளில் கண்டதில் என்று கால்பந்து ரசிகர்கள் முதல் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் வரை பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு அர்ஜென்டினாவிற்கு இணையாக தரமான சம்பவத்தை செய்தது பிரான்ஸ் அணி.

கால்பந்து நாயகன் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி எந்த அளவிற்கு கால்பந்தின் கடவுளாக உயர்த்தி பேசப்படுகிறாரோ? அதேபோல் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே-வையும் பேசியே ஆக வேண்டும். உலகக்கோப்பை இறுதியில் ஹாட்ரிக், தனி ஒருவனாக அணியை வழிநடத்தி சென்றது, கோல்டன் பூட், பீலே சாதனைகள் முறியடிப்பு என்றெல்லாம் புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.

அந்த ஒரு போட்டோ… ரொனால்டோ சாதனை மொத்தமா காலி… ஒரே அடியாய் எகிறிய மெஸ்ஸி!

கோப்பையுடன் நாடு திரும்பிய அணி

இந்த சூழலில் வெற்றிக் கோப்பை உடன் அர்ஜென்டினா கால்பந்து அணியினர் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கோப்பையை வென்ற பிறகு பேட்டியளித்த லியோனல் மெஸ்ஸி, உடனே அர்ஜென்டினா செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு கொண்டாட்டங்கள் வேற லெவலில் இருக்கும். அதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

களைகட்டும் கொண்டாட்டம்

இதற்கு மேலும் என்னால் காத்திருக்க இயலாது என்று பேசியிருந்தார். அதற்கு சிறிதும் குறைவின்றி அர்ஜென்டினாவில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திறந்தவெளி வாகனத்தில் உலகக்கோப்பை உடன் ஊர்வலமாக வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுகிலும் மக்கள் திரண்டு வந்து வாழ்த்துகள் கூறி ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விதவிதமான ஏற்பாடுகள்

இதற்கிடையில் அர்ஜென்டினா வெற்றி பெற்ற தருணத்தை அந்நாட்டு மக்கள் எப்படி கொண்டாடினர் என்பது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்த சில வாரங்கள் அர்ஜென்டினாவில் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது. அர்ஜென்டினா வெற்றியை சொந்த நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் விதவிதமாக கொண்டாடி வருகின்றனர்.

ஒருநாள் பொது விடுமுறை

இலவச பிரியாணி, இலவச சூப், இலவச பர்கர், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அட்டகாசமான ஆஃபர், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் என தாறுமாறாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அர்ஜென்டினா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 20) ஒருநாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

ரெண்டு பேருமே ஹீரோ… இனி ஒன்னா கோப்பையை ஜெயிக்கலாம் வாங்க… PSG மரண வெயிட்டிங்!

ஒபிலிஸ்கோவிற்கு வரும் வீரர்கள்

அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் இன்று நண்பகல் தலைநகர் பியூனஸ் ஐரிஸில் உள்ள தேசிய நினைவு சின்னமான Obelisco de Buenos Aires-க்கு உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து அணியினர் வருகை புரியவுள்ளனர்.

அங்கு தங்கள் வெற்றியை பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாட இருப்பதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கேற்ப அரசு விடுமுறை அறிவிப்பு வந்துள்ளதால் அர்ஜென்டினா மக்கள் பலரும் ஒபிலிஸ்கோ தேசிய நினைவு சின்னத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.