இருமல் சிரப் அருந்திய பின் நின்று போன 2 வயது குழந்தையின் இதயம்! நடந்தது என்ன!

சளி இருமல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் உடல் நிலை பாதிப்பு. அதுவும் மாறிவரும் காலநிலையால் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சளி மற்றும் இருமல் வர ஆரம்பிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் முதலில் இருமலை போக்க  சிரப்பைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? இருமல் சிரப் குடித்த 30 மாத குழந்தையின் இதயத்துடிப்பு நின்ற நிலையில், மும்பையில்  நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மருந்து கொடுத்த 20 நிமிடங்களுக்குப் பிறகு, நின்று போன இதயத் துடிப்பு

மும்பையைச் சேர்ந்த வலி மேலாண்மை நிபுணர் திலு மங்கேஷ்கரின் (டாக்டர் திலு மங்கேஷிகர்) இரண்டரை வயது பேரன் டிசம்பர் 15 அன்று இருமல் மற்றும் சளியால் அவதிப்பட்டான். இதற்குப் பிறகு, அவரது தாயார் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் இருமல் மருந்தைக் கொடுத்தார். ஆனால் மருந்து கொடுத்த 20 நிமிடங்களுக்குப் பிறகு, குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டது. அதன் பின் அவரது இதயத் துடிப்பு நின்றுவிட்டது. இதனுடன், குழந்தை மூச்சுவிடக்கூட முடியவில்லை.

சுமார் 20 நிமிடங்களுக்கு குழந்தையின் நாடித் துடிப்பு இல்லை

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், மாரடைப்புக்கு பிறகு, குழந்தையின் தாய் உடனடியாக மும்பையின் ஹாஜி அலி பகுதியில் அமைந்துள்ள எஸ்ஆர்சிசி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றார் சென்றார் என்றும், ​​அங்கு குழந்தைக்கு இதய நுரையீரல் புத்துயிர் (CPR) கொடுக்கபட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. குழந்தை தனது கண்களைத் திறக்க வைக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்க வைக்கவும் சுமார் 20 நிமிடங்கள் எடுத்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இருமல் சிரப் தவிர வேறு எந்த காரணமும் கிடைக்கவில்லை

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த குழந்தையின் தாய், இந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் பல பரிசோதனைகளை செய்தோம். ஆனால் இருமல் மருந்தைத் தவிர வேறு எந்த காரணத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார். இந்த மருந்தில் குளோர்பெனிரமைன் மற்றும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் கலவைகள் கலந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதாகவும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க எஃப்.டி.ஏ தடை விதித்துள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இந்த மருந்தில் அத்தகைய லேபிள் எதுவும் இல்லை.  மேலும் மருத்துவர்கள் அதை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள் என கூறப்படுகிறது.

இருமல் சிரப் காரணமாகத் தான் இதய துடிப்பு நின்றது நிரூபிப்பது எளிதல்ல

சம்பவம் குறித்து மூத்த குழந்தை நிபுணர் ஒருவர் கூறுகையில், குழந்தை மயங்கி விழுவதற்கும் இருமல் மருந்தின் டோஸுக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்துவது எளிதல்ல. மகாராஷ்டிராவின் குழந்தைகளுக்கான கோவிட் டாஸ்க் ஃபோர்ஸில் உறுப்பினராக இருந்த டாக்டர் விஜய் யெவாலே, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை பரிந்துரைக்கவில்லை என்று கூறினார். மருத்துவர் மேலும் கூறுகையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருமல் சிரப் தேவையில்லை. உதாரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் ஆகியவை சூடான ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குணப்படுத்தப்படலாம். சில இருமல் சிரப்களை இதயப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தும் புதிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.