உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்ள ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதிநிதி என்ற ரீதியில் தமது கட்சி தேர்தலுக்கு தயார் என்றும், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளுமாறு கட்சி தலைமைத்துவத்திடமிருந்து ஆலோசனை கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைவாக நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தயார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வேட்பு மனுக்கான குழுவை அமைத்து அதற்காக கட்சியின் பொறிமுறை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
எந்த வகையிலும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.