எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் மீண்டும் வெளியாகும் ‛சிரித்து வாழ வேண்டும்'

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான படம் சிரித்து வாழ வேண்டும். எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். எம்.என்.நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், ஐசரிவேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன், எல்.காஞ்சனா உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் பாடல்களை வாலியும், புலமைப் பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். 'உலகம் என்னும்… என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார்கள். 'எண்ணத்தில் நலமிருந்தால்.. மற்றும் 'ஒன்றே சொல்வான் நன்றே செய்வான், பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ என்ற பாடல்களும் இடம்பெற்ற படம். தற்போது இந்த படம் நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வெர்சன் எம்ஜிஆரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 17ம் தேதியன்று வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.