கடவுள் விஷ்ணுவை கரம்பிடித்த பட்டதாரி பெண்: ராஜஸ்தானில் ருசிகரம்| Dinamalar

ஜெய்பூர்: திருமணம் செய்தால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என்று கருதி கடவுள் விஷ்ணுவையே பட்டதாரி இளம்பெண் ஒருவர் திருமணம் முடித்துள்ளார்.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக பலரும் கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ராஜஸ்தானில் கடவுளையே ஒரு பெண் திருமணம் செய்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள நரசிங்கபுரா பகுதியை சேர்ந்தவர் பூஜா. முதுகலை பட்டம் பெற்ற இவருக்கு 30 வயது ஆகிறது. திருமணம் செய்துக்கொள்ள வீட்டில் வற்புறுத்தியும் திருமண வாழ்க்கையில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம்.

திருமணம் செய்தால், கணவன் – மனைவி இடையே சண்டை வரும், பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார் பூஜா. மேலும், இதன் காரணமாக கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட பெற்றோர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் சம்மதித்தனர். மகளின் ஆசையை நிறைவேற்ற ஹிந்து பாரம்பரிய படி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட உறவினர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஹிந்து முறைப்படி அனைத்து சடங்குகளும் நடைபெற்று, கடவுள் விஷ்ணு சிலையை வைத்து மணந்து கொண்டதாக பூஜா கூறியுள்ளார். பண்டிதர் ஒருவர் கடவுளை திருமணம் செய்வது சாத்தியம் என்று கூறியதால் அவர் கூறிய சடங்குகளை செய்து மணம் முடித்துக்கொண்டதாக பூஜா கூறினார்.

டிச.,8ம் தேதி இத்திருமணம் நடந்தாலும், தற்போது தான் இது குறித்த செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது தனது வீட்டிலேயே ஒரு கோவில் அமைத்து கடவுள் விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருவதாக பூஜா கூறி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.