தெலங்கானாவில், அதிகாலை கோயிலுக்கு சென்ற இளம்பெண்ணை, காரில் கடத்திச்சென்ற கும்பலை, ஆறு தனிப்படைகள் அமைத்து, போலீசார் தேடிவருகின்றனர்.
ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில், தந்தையுடன் கோயிலுக்கு சென்ற 18 வயது இளம் பெண்ணை, 3 பேர் கொண்ட கும்பல், வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்ற நிலையில், தடுக்க வந்த பெண்ணின் தந்தையையும் தாக்கிவிட்டு தப்பியது.
சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவர், அந்த இளம்பெண்ணை கடத்தியதாகவும், தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், மீண்டும் கடத்தியுள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.