தங்கக் கையுறை விருதை வாங்கி ஆபாசமான சைகையை காட்டிய அர்ஜென்டினா கோல்கீப்பர்., கொடுத்த விளக்கம்


அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல்டன் கையுறை விருதை வைத்து ‘ஆபாசமான’ சைகையை செய்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை 2022-ன் இறுதிப் போட்டியில், கைலியன் எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

‘கோல்டன் பூட்’ விருதை எம்பப்பே வென்றாலும், மெஸ்ஸி தொடர் நாயகனுக்கான ‘கோல்டன் பால்’ விருது வழங்கப்பட்டது.

‘கோல்டன் கிளௌவ்’ விருது

தங்கக் கையுறை விருதை வாங்கி ஆபாசமான சைகையை காட்டிய அர்ஜென்டினா கோல்கீப்பர்., கொடுத்த விளக்கம் | Argentina Goalkeeper Gesture Golden Glove Fifa WcGettyImages

அதேபோல், அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்க்கு (Emiliano Martinez) சிறந்த கோல்கேப்பருக்கான ‘கோல்டன் கிளௌவ்’ விருது வழங்கட்டது. கோல்டன் க்ளோவ் வென்ற முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை மார்டினெஸ் பெற்றார்.

ஆனால், அவர் விருது பெற்றதற்காக செய்திகளில் இடம்பெற்றதை விட, அந்த விருதை வாங்கியபின் அதை வைத்து அவர் என்ன செய்தார் என்பதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

எமிலியானோ மார்டினெஸ் தங்கக் கையுறை விருதை தனது கவட்டைக்கு அருகில் வைத்து ஒரு மோசமான, ஆபாசமான சைகையை செய்தார். உடனடியாக, அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இணையத்தில் பலர் இதுபோன்ற செயலுக்கு மார்டினெஸைக் கண்டித்தனர்.

தங்கக் கையுறை விருதை வாங்கி ஆபாசமான சைகையை காட்டிய அர்ஜென்டினா கோல்கீப்பர்., கொடுத்த விளக்கம் | Argentina Goalkeeper Gesture Golden Glove Fifa Wc

காரணத்தை விளக்கிய எமிலியானோ மார்டினெஸ்

இந்நிலையில், அப்படி செய்ததற்கான காரணத்தை எமிலியானோ மார்டினெஸ் விளக்கியுள்ளார்.

பிரஞ்சு கால்பந்து வீரர்கள் தன்னை கடுமையாக கேலி செய்ததால் தான் அதைச் செய்ததாக கூறினார்.

அதற்காக அவர் அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இரண்டு முறை சாம்பியனான பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் வென்ற பிறகு, உணர்ச்சிவசப்பட்ட மார்டினெஸ், “நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். நாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் அவர்கள் திரும்பி வர முடிந்தது. இது மிகவும் சிக்கலான விளையாட்டு. எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்கள் வெற்றி பெறுவதற்கான கடைசி வாய்ப்பு, அதிர்ஷ்டவசமாக என்னால் அதை என் காலால் நிறுத்த முடிந்தது.” என்றார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.