தாம்பரம் அருகே விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள தாம்பரம் பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி என்ற இளைஞர் விஜய்யின் தீவிர ரசிகர். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். மேற்கு தாம்பரம் பகுதியில் 32 வது வார்டு விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்து தன்னுடைய தாயிடம் கருப்பசாமி தகராறில் ஈடுபட்டுள்ளார். கருப்பசாமி பள்ளி படிக்கும் ஒரு சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் வீடியோ காலில் பேசி வருவாராம். இத்தகைய நிலையில் சம்பவ தினத்தன்று அவர் நல்ல மது போதையில் இருந்துள்ளார்.
அப்போது தனது காதலிக்கு வீடியோ கால் செய்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமி தனது தாய் வருவதாக கூறி வீடியோ காலை துண்டித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.