சென்னை மாநகராட்சி மையப் பிரியா இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு 52 மற்றும் 53 க்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அண்ணா பூங்காவில் நடைப்பெற்று வரும் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய பூங்காவில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய சென்று இருந்தார்.
அப்பொழுது பணிகளை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் (கல்வி), சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் மேயர் பிரியாவுடன் சென்றனர்.
இந்த நிலையில் அண்ணா பூங்காவை பார்வையிட சென்ற மேயர் பிரியாவை அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீர் என தடுத்து நிறுத்தினார்.
பிறகு அந்த முதியவர் சென்னை மேயர் பிரியாவிடம்”எங்கே பார்த்தாலும் உங்களைத்தான் பார்க்க முடிகிறது. தமிழக அமைச்சர்கள் இடையே நீங்கள் அழகாக இருக்கீங்க. அது மிகவும் சந்தோஷமாக இருக்கு. ரொம்ப நன்றி” என கூறினார். இதனைக் கேட்ட மேயர் பிரியா வெட்டத்தில் சிரித்தவாறு நன்றி கூறி விட்டுச் சென்றார். இதனைக் கண்ட அருகில் இருந்த அதிகாரிகளும் நிர்வாகிகளும் சிரித்தவாறு நகர்ந்து சென்றனர்.