பல மில்லியனுக்கு அதிபதி…ஒரே எண்ணில் ஆறு முறை லொட்டரி பரிசை தட்டி தூக்கிய முதியவர்!


அமெரிக்காவில் ரேமண்ட் ராபர்ட்ஸ் சீனியர் என்ற நபர் ஒரே எண்களுடன் தொடர்ச்சியாக ஆறுமுறை லாட்டரி பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து ஆறு முறை அடித்த அதிர்ஷ்டம்

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பால் ரிவர் நகரை சேர்ந்த ரேமண்ட் ராபர்ட்ஸ் சீனியர் என்ற நபர் மல்டி-ஸ்டேட் லக்கி ஃபார் லைஃப் லொட்டரி விளையாட்டில் கலந்து கொண்டு, ஆறு ஆண்டுகளுக்கு  $25,000 (£20,000) என்ற தொகையை வென்றதாக மசாசூசெட்ஸ் ஸ்டேட் லொட்டரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவரது கண்மூடித்தனமான அதிர்ஷ்டத்தில் ஒரே எண்களுடன் தொடர்ச்சியாக ஆறுமுறை லாட்டரி பரிசை வென்றுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பல மில்லியனுக்கு அதிபதி...ஒரே எண்ணில் ஆறு முறை லொட்டரி பரிசை தட்டி தூக்கிய முதியவர்! | Us Raymond Roberts Won Lottery 6 Times In A RowMassachusetts State Lottery (Newsflash)

ராபர்ட்ஸ் வெற்றி பெற்ற முதல் ஐந்து டிக்கெட்டுகளுக்கு மொத்த தொகையை எடுக்க முடிவு செய்துள்ளார். அதனடிப்படையில் அவருக்கு ஐந்து முறை  $390,000 (£320,000) கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது ஆறாவது டிக்கெட்டிற்கு அவர் மாதத்திற்கு $25,000 எடுத்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

உள்ளுணர்வுக்கு நன்றி

ஒரே டிராவில் ஆறு டிக்கெட்டுகளை வாங்கும் வினோதமான முடிவை ஏன் எடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, அவர் அதை “உள்ளுணர்வு” என்று விவரித்தார்.

அத்துடன் அவர் எண்களைப் பற்றி நன்றாக உணர்ந்ததாகவும், அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை செய்து வருவதாகவும் தெரிவித்தார், மேலும் இறுதியாக பெரிய கொடுப்பனவுக்கான நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார்.

பல மில்லியனுக்கு அதிபதி...ஒரே எண்ணில் ஆறு முறை லொட்டரி பரிசை தட்டி தூக்கிய முதியவர்! | Us Raymond Roberts Won Lottery 6 Times In A Row(getty)

பரிசு தொகையை என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டதற்கு, புத்தம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மீதமுள்ளதை என்ன செய்வது என்று திட்டமிடுவதற்கு முன்பு சாலையில் நடக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.