புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை வயது சாகீப்தியா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சாகீப்தியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தண்ணீர் இருந்த அன்னக்கூடையில் தலைகுப்பாரா விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.