ரஃபேல் வாட்ச்… அண்ணாமலையின் முகத்திரையை கிழிக்கும் ஆதாரம்..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்சின் விலை 10 லட்சம் ரூபாய் என்று திமுக ஐடி விங்க் மற்றும் கட்சி நிர்வாகிகள் தகவலை பரப்பினர். இது பேசுபொருளானதை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விளக்கம் அளித்த அண்ணாமலை, ரபேல் விமானம் செய்ய பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களை வைத்து இந்த வாட்ச் செய்யப்பட்டுள்ளது.

உலகத்திலேயே 500 ரபேல் வாட்சுகள் மட்டுமே செய்யப்பட்டன. அதில் ஒரு வாட்சை தான் கட்டியுள்ளேன். ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி. என்னை தவிர வேற யாரவது இதை வாங்குவார்களா? என தெரிவித்தார். அதற்கு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஐடி விங் தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எதிரொலித்தன.

திமுக ஐடி விங்க் போட்டுள்ள ட்வீட் பதிவில் அண்ணாமலை கட்டியுள்ள வாட்சின் விலை இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் அதில், ”ரபேல் விமானம் ஏதோ இந்தியாவிற்காவே தயாரிக்கப்படும் ‘சங்கி’ விமானம் என்பது போல பேசி இருக்கிறீர்களே. ரபேல் விமானம் பிரான்ஸ், எகிப்து, கிரீஸ், கத்தாரில் பயன்பாட்டிலும் குரோஷியா, இந்தோனேசியா, UAE மற்றும் பல நாடுகள் வாங்கிவருவது உங்க சங்கி மூளைக்கு தெரியாதா?

”ரபேல் வாட்ச் நம்மளத் தவிர வேற யாரு வாங்குவாங்கன்னு சொல்றிங்க! ஆனா உலகில் யாரு வேணாலும் அந்த வாட்சை வாங்கலாம் என்பது உங்களுக்கு தெரியாதா? மொத்த 500 வாட்ச்களில் ஒரு வாட்ச் எப்படி உங்களிடம் வந்தது என்பது தான் கேள்வி அதுக்கு பதில் சொல்லாமல், தத்தித் தனமாக உளறுகிறீர்களே ஏன்? பயமா?”

”நான் தேசியவாதி அதனால ரபேல் வாட்ச் கட்டியிருக்கேன் சொல்ற நீங்க, உண்மையான தேசியவாதின்னா பிரான்ஸ் நாட்டின் Dassault Aviation நிறுவனத்தின் வாட்சை கட்டாமல், இந்திய நிறுவனமான Hindustan Aeronautics Ltd நிறுவன வாட்சைத் தானே கட்டியிருக்கணும்? அப்போ நீங்க தேச துரோகியா?” என இவ்வாறு விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இச்சம்பவம் குறித்து மீண்டும் பேசினார். அப்போது அவர் கூறியது; ரஃபேல் கை கடிகாரத்தை வாங்கியதற்கான பில் உள்ளதா என்றுதான் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நான் கேள்வி எழுப்பி இருந்தேன். அந்த கடிகாரத்தை அவர் தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின் வாங்கினாரா என்பது முக்கியமல்ல. அவர் வாங்கினாரா இல்லை யாராவது அவருக்கு வெகுமதியாகக் கொடுத்தார்களா என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது என அமைச்சர் கூறினார்.

மேலும், அண்ணாமலைக்கு மடியில் கணம் உள்ளது. முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கை கடிகாரத்திற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும். எனது இந்த கேள்வியை அடுத்து, ரஃபேல் கை கடிகாரத்திற்கான பில்லை தயாரிக்கக்கூடிய பணி தற்போது நடைபெற்று வருகிறது என அறிகிறேன். முதலில் அவர் அதனை வெளியிடட்டும். பிறகு, அடுத்தகட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை கூறுகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.