ரஷ்ய ஜனாதிபதி புடினின் முடிவால் கதிகலங்கிப் போன உக்ரைன்: எதுவேண்டுமானாலும் நடக்கலாம்!


ரஷ்யா புதிய தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற அச்சத்தில் பெலாரஸுடனான தங்களது எல்லைப் பாதுகாப்பை உக்ரைன் பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆயுதங்களை குவிக்க முடிவு

இதன் ஒருபகுதியாக பெலாரஸ் எல்லையில் ஆயுதங்களை குவிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளதாக துணை உள்விவகார அமைச்சர் Yevhen Yenin தெரிவித்துள்ளார்.

திடீரென்று பெலாரஸ் ஜனாதிபதியை சந்திக்கும் பொருட்டு விளாடீர் புடின் புறப்பட்டு சென்றதாக வெளியான தகவலை அடுத்தே உக்ரைன் எல்லைகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் முடிவால் கதிகலங்கிப் போன உக்ரைன்: எதுவேண்டுமானாலும் நடக்கலாம்! | Ukraine Boost Belarus Border Defences

@getty

பெலாரஸ் நாடானது ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தங்கள் எல்லையை பகிர்ந்து வருகிறது.
மேலும், பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய துருப்புகள் அங்குள்ள ராணுவத்துடன் இணைந்து கூட்டுப்பயிற்சியும் மேற்கொள்ளும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.

கதிகலங்கிப் போயுள்ள உக்ரைன்

விளாடிமிர் புடினின் இந்த அதிரடி நகர்வால் உக்ரைன் தரப்பு கதிகலங்கிப் போயுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, பெலாரஸ் நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், பிப்ரவரியில் படையெடுப்பைத் தொடங்க ரஷ்ய துருப்புக்கள் அதன் பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதித்தது.

ஆனால் சமீப நாட்களாக தங்கள் ஆதரவை வெளிக்காட்ட ரஷ்யா கடுமையான அழுத்தம் அளித்து வருகிறது.
இதன் ஒருபகுதியகவே புடின் திடீர் விஜயமாக பெலாரஸ் சென்றுள்ளார் என்ற கருத்தும் வெளியானது.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் முடிவால் கதிகலங்கிப் போன உக்ரைன்: எதுவேண்டுமானாலும் நடக்கலாம்! | Ukraine Boost Belarus Border Defences

@East2west News

ஆனால், அவ்வாறான சூழலை ரஷ்யா ஒருபோதும் முன்னெடுக்காது என முக்கிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விளாடிமிர் புடின் பெலாரஸ் சென்றுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளனர்.
இருவரும் ஆலோசனை மேற்கொண்டதன் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.