ராணுவ வீரர்களை பற்றி அப்படி பேசி இருக்க கூடாது; அமைச்சர் ஜெய்சங்கர் வருத்தம்.!

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே என்ற பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் அத்துமீறி நுழைய முயன்றன. இதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள், சீனப் படையுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மோதலின் போது இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப் படைகளை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர்.

இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயன்ற சம்பவம், இந்திய – சீனப் படைகளின் மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அந்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து வருவதால் அவை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ராகுல்காந்தி கூறும்போது, சீனா நமது நிலத்தை கைப்பற்றி உள்ளது. நமது ராணுவ வீரர்களை சீன வீரர்கள் அடித்து விரட்டுகிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் மத்திய அரசு அதை புறக்கணித்து மறைக்கிறது. லடாக் மற்றும் அருணாச்சலத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. போரை நடத்த சீனா முடிவு செய்துவிட்டது. ஆனால் இதை எதிர்கொள்ளாமல் மோடி அரசு தூங்குகிறது என்று காட்டமாக கூறினார்.

இந்தநிலையில் இந்திய வீரர்களை அடித்து விரட்டுகிறார்கள் என்று கூறியது ராணுவ வீரர்களை விமர்சிப்பது அவமதிப்பது போலதாகும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “அரசியல் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் நமக்கு பிரச்சனை இல்லை. அரசியல் விமர்சனம் வந்தாலும் எப்போதாவது என் சொந்த புரிதலை ஆழப்படுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

உயிரி ஆராய்ச்சி: தேசிய விலங்கு வள மையம் தொடக்கம்!

நமது ஜவான்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சிக்கக் கூடாது. யாங்ட்சேயில் 13,000 அடி உயரத்தில் நின்று நமது எல்லையைக் காக்கும் நமது வீரர்கள், அடிவாங்குகிறார்கள் என்ற வார்த்தைக்கு தகுதியற்றவர்கள், அந்த வார்த்தையை நமது ஜவான்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.