ரூ.1,20,000 மதிப்புள்ள மேக்புக்; ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் என்பவர் தன் மகளுக்காக அமேசானில் மேக்புக் ப்ரோவை 1,200 பவுண்டுக்கு (ரூ.1,20,000) ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஐந்து பவுண்டு மதிப்புள்ள நாயின் உணவு பெடிகிரி (Pedigree) வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர்,போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதையடுத்து, உடனே அமேசானின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.

அமேசான்

ஆனால் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், அவர் செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டபோது, `மேக்புக்கை திரும்ப அனுப்பினால், பணம் திரும்ப தரப்படும்’ என்று கூறியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்திடம் 15 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியிருக்கிறார். அதன் பிறகே அவர்கள் பணத்தை திருப்பி தர ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

அமேசான்

இது தொடர்பாக ஆலன், “இருபது வருடங்களாக நான் அமேசான் வாடிக்கையாளராக இருந்து வருகிறேன். அவர்களுடன் இதற்கு முன்னர், இது போல எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் இப்போது நடந்த நிகழ்வு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது . குறிப்பாக அவர்கள் என்னை நடத்திய விதம், என்னை மிகவும் காயப்படுத்தியது. நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. அதோடு, அமேசான் செய்தித் தொடர்பாளர் முழு பணத்தைத் திரும்பப் பெற உதவுவதாக தெரிவித்திருக்கிறார்” எனக் கூறினார்.

இதற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஃப்ளிப்கார்ட்டில் ஐபோனை ஆர்டர் செய்தபோது, அதற்கு பதிலாக ஒரு டிடர்ஜென்ட் பார் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் நிறுவனத்தால் அவருக்குப் பணம் திரும்ப வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.