'வாரிசு' வெற்றி பெற சிறப்பு தரிசனம்: சபரிமலையில் பேனர் வைத்த மயிலாடுதுறை ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இரு தரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

image

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையைச் சேர்ந்த ரசிகர்கள் சுபாஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சபரிமலை கோவிலுக்கு சென்று அங்கே பதினெட்டாம்படி அருகில் வாரிசு பட பேனரை உயர்த்தி பிடித்தபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து விஜய் ரசிகர்களால் இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.