சேலையூர் அருகே மதுரபாக்கம் வனப்பகுதியில் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் போதகரை 700 ரூபாய் பணம், சாதா செல்போனுக்காக கொலை செய்தது போலீஸ்சாரின் பல்வேறு கட்ட விசாரனையில் தெரிய வந்து கொலையாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலையூர் அடுத்த அகரம் தென் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ பெண் போதகர் எஸ்தர்(51), ஜீன் மாதம் மதுரபாக்கம் வனப்பகுதியில் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அவரில் செல்போன் காணமல் போன நிலையில் போலீசார் ஆதாய கொலையா என தேடிவந்த நிலையில் சில மாதங்கள் கழித்து அந்த செல்போனில் சிம் போட்டு பேசிய லோகநாதன்(20) எனும் இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் 700 ரூபாய் பணத்திற்கு கொலை நடந்துள்ளதாக தெரிய வந்தது.
இந்நிலையில் மர்ம மரணம் என பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளி லோகநாதனை கைது செய்து நிதிபதி முன்பாக ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சென்னையை அடுத்த சேலையூர் அருகே அகரம் தென் பகுதியை சேர்ந்த பெண்மணி எஸ்தர்(51), கிறிஸ்தவ போதகரக உள்ள இவர் கணவரை பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்த நிலையில் மகள் ஏஞ்ஜல் வீட்டில் தங்கியவாறு கிறிஸ்வர்களின் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்வது வழக்கம், இந்த நிலையில் கடந்த மே மாதம் 26ம் தேதி அதிகாலை வீட்டில் இருந்து கைபையுடன் சென்றவர் விடு திரும்பவில்லை என ஜீன் மாதம் 6 ம் தேதி அவரின் மகள் ஏஞ்ஜல் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனயடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் சேலையூர் அடுத்த மதுரப்பாக்கம் வனப்பகுதியில் எலும்பு கூடு ஒன்று இருப்பதாக சேலையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. பின்பு நேரில் சென்று எலும்புகூட்டையும் ஒரு கை பை ஒன்றும் கைப்பற்றிய போலீசார் ஏஞ்சலை நேரில் அழைத்து எலும்புகூட காட்டி விசாரித்த போது அடையாளம் தெரிய வில்லை.