FIFA உலகக்கோப்பை சர்ச்சை: மெஸ்ஸியின் இரண்டாவது கோல் செல்லாது.! பிரான்ஸ் ரசிகர்கள் கோபம்


உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோல் விதிமுறைகளின்படி செல்லாது என பிரான்ஸ் ரசிகர்கள் கொந்தளித்துவருகின்றனர்.

சர்ச்சை

FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றியைக் கொண்டாடிய நேரத்தில், புதிய சர்ச்சை ஒன்று அரங்கேறியது.

இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோல் இந்த சர்ச்சையின் மையமாக மாறியது.

FIFA உலகக்கோப்பை சர்ச்சை: மெஸ்ஸியின் இரண்டாவது கோல் செல்லாது.! பிரான்ஸ் ரசிகர்கள் கோபம் | Messis Second Goal Fifa World Cup 2022 FinalAP

மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோல் விதி மீறல் என்றும்.. அந்த கோலை நடுவர் எப்படி அனுமதித்தார் என்று பிரான்ஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நடுவரின் முடிவு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோல்

ஆட்டத்தின் 108-வது நிமிடத்தில் கூடுதல் நேரத்தில் மார்டினெஸ் அடித்த பந்து பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லொரிஸை தாக்கி திரும்பியது. உடனே அதை மெஸ்ஸி தனது வலது காலால் கோல் கோட்டுக்குள் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலை பெற்றது.

ஆனால் மெஸ்ஸி கோல் அடிக்க, அர்ஜென்டினாவின் ரிசர்வ் வீரர்கள் ஆடுகளத்தில் புகுந்தனர். அப்போது பந்து கோல் கோட்டை தாண்டவில்லை.

கோல் செல்லாது

FIFA விதிகளின்படி, கோல் அடிக்கப்படும் நேரத்தில் கூடுதல் நபர்கள் (வீரர்கள், மாற்று வீரர்கள், அதிகாரிகள்) களத்தில் இருந்தால், நடுவர்கள் கோலை அனுமதிக்கக் கூடாது. ஆனால் அனுமதிக்கப்பட்டது.

அதற்குக் காரணம், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவர் சைமன் மார்சினெக் ஆட்டத்தைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்ததாகவும், இந்த விஷயத்தை கவனிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மறுபுறம், போட்டி அதிகாரிகள் கூட இந்த விடயத்தை அங்கீகரிக்கவில்லை என்று யூரோஸ்போர்ட்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினையில் பிரான்ஸ் தங்கள் புகாரை பதிவு செய்யலாம். ஆனால், முடிவு மாறுமா என்பது தெரியவில்லை.


 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.