Kushboo: தைரியம் இருந்தா நேர்ல வா.. என் செருப்பு சைஸ் 41: நடிகை குஷ்பு ஆவேசம்.!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் தனது அண்ணனின் மறைவு குறித்து கிண்டலாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த குஷ்பு தற்போது தொலைக்காட்சி, அரசியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பிசியாக இயங்கி வருகிறார். சோஷியல் மீடியாவில் பிசியாக இருக்கும் குஷ்பு, அவ்வப்போது தனது அரசியல் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார் குஷ்பு. அதில், தனது அண்ணனுக்கு உடல் நலம் சரியில்லை. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி குஷ்புவின் அண்ணன் கடந்த சனிக்கிழமை காலமானார். இதுக்குறித்து பதிவிட்ட குஷ்பு, உங்களது அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவிற்கு அவர்கள் விடைபெறும் நேரமும் வரும். எனது சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவரது அன்பும், வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும்.

Connect: நயன்தாராவுக்கு வந்த புதிய சிக்கல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. வாழ்க்கையின் பயணமானது கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவன் ‘அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்துருச்சு’ என்று கிண்டலாக கமெண்ட் செய்திருந்தான்.

Varisu vs Thunivu: நேத்து ‘துணிவு’.. இன்னைக்கு ‘வாரிசு’: சரியான போட்டியா இருக்கே.!

இதனால் கடும் கோபமான குஷ்பு, என் செருப்பு சைஸ் 41. தைரியம் இருந்தால் நேரில் வா. இதுதான் உங்கள் கீழ் தனமான புத்தி. மாறவே மாட்டீங்களாடா. நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும் என கடுமையாக பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர் அந்த கமெண்டை டெலீட் செய்து ஓடி விட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.