நியூடெல்லி: மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, மாநில சட்டசபை வளாகத்திற்குள் மை பேனா கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைக்குள் நுழைவதற்கு முன் பேனா சரிபார்க்கப்படும்
மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளான நேற்று (2022 டிசம்பர் 19), சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடருக்காக சட்டசபைக்குள் நுழையும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளிடம் மை பேனாக்கள் இல்லை. சட்டமன்றத்திற்குள் செல்லும் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர், மை பேனாக்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
மகாராஷ்டிர மாநில உயர் கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சென்ற சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். அதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அதுதவிர ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த காரணத்திற்காக மை பேனா தடை செய்யப்பட்டது
தன் மீது வீசப்பட்ட சந்திரகாந்த் பாட்டீல் கண்களில் பட்டிருந்தால், பார்வை போயிருக்கும், வேறு நோய் உருவாகியிருக்கலாம் என்று கூறினார். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் அவரது கருத்தை நிராகரித்து, அவர் ‘மன சமநிலையை இழந்துவிட்டார்’ என்று விமர்சித்தன. மை வீசியதால் யாரும் இறக்கவில்லை என்று பலரும் கூறுகின்றானர்..
குறிப்பிடத்தக்க வகையில், டிசம்பர் 10ம் தேதியன்று, மை வீசித் தாக்கப்பட்ட சந்திரகாந்த் பாட்டீல், கடந்த வாரம் நடந்த மற்றொரு விழாவில், ஹெல்மெட் அணிந்து, பலத்த பலத்த பாதுகாப்புடன் வந்தார்.