Twitter தலைவர் பொறுப்பில் இருந்து Elon Musk விலகுவாரா? ட்விட்டர் வாக்கு முடிவு!

எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதும் பல முக்கிய முடிவுகளை Twitter Polls எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் முடிவு செய்கிறார். அதில் டொனால்ட் டிரம்ப், கென்யே வெஸ்ட் போன்றவர்களை மீண்டும் ட்விட்டரில் சேர்ப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தினார்.

அதில் முடிவாக மீண்டும் அவர்களை சேர்க்கலாம் என்று வாக்குகள் வந்தன இதனால் அவர்களின் கணக்கு மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்பட்டது. தற்போது அவர் ட்விட்டரின் தலைவர் பொறுப்பில் நீடிக்கவேண்டுமா? இல்லை விளக்கவேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்தினார்.

அதில் பதிவிட அவர் நீங்கள் ஆசைப்பட்டு கேட்பதை ஒருமுறை யோசித்துக்கொள்ளுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக இப்போது அவருக்கு எதிராக வாக்குகள் விழுந்துள்ளன. இதில் 17 மில்லியன் பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். அதில் 57% பேர் எலன் மஸ்க் ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்று வாக்கு செலுத்தியுள்ளனர்.

இந்த வாக்கு எண்ணிக்கையை பொறுத்து தான் முடிவெடுக்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார். இப்போது அவர் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகினாலும் நிர்வாகம் அவரிடமே இருக்கும். ஆனால் அவருக்கு பதிலாக ட்விட்டர் நடவடிக்கைகளை வேறு ஒருவர் பார்த்துக்கொள்வார் என்று தெரிகிறது.

பலர் இதை ஒரு போலி நாடகம் எனவும் எப்படி இருந்தாலும் அவர் தலைமை பொறுப்பை வேறு ஒருவரிடம் வாங்கத்தான் போகிறார் அதற்கான ஆள் இப்போது யாராவது கிடைத்திருப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.