Urfi Javed Viral Video: உர்ஃபி ஜாவேத் என்ற பெயரைக் கேட்டாலே அவரது ரசிகர்கள் மிகவும் சுறுசுறுப்பாக மாறி விடுகின்றனர். இன்னைக்கு என்ன வீடியோ வந்திருக்குமோ என்ற உற்சாகம் அவர்களை தொற்றிக்கொள்கிறது. அதற்கு காரணம் அவரின் சூடான தேகம், கவரும் அழகு, அவரது துணிசல் மற்றும் அசாதாரண போட்டோஷூட் ஆகும். சமூக ஊடகங்களில் தொடர்ந்து வீடியோ, புகைப்படம் ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. தற்போது உர்ஃபி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு “நீக்கப்பட்ட காட்சிகள்” எனப் பதிவிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், உர்ஃபி ஜாவேத் மிகவும் தைரியமானவராக மற்றும் பாறையில் மேல் ஏறிவரும் சிறுத்தை போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உர்ஃபியின் இந்த புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஓடிடி (OTT) இயங்குதளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) உடன் இணைந்து உர்ஃபியின் இந்த வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில் உர்ஃபி மட்டுமில்லை, அவருடன் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியான ‘ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்’ நடிகர்களும் காணப்படுகின்றனர். அந்த வீடியோவில் சிறுத்தை பாறையில் படுத்திருப்பது போல் உர்ஃபி நடந்து செல்வது போல் தெரிகிறது.
வீடியோவை:
இது ஒரு விளம்பர வீடியோ. இதில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியை உர்ஃபி ஜாவேத் விளம்பரப்படுத்துகிறார். உர்ஃபி சிறுத்தையைப் போல பாறையில் நடந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் நட்சத்திர நடிகர், நடிகைகள் ஜீப்பில் அமர்ந்து பைனாகுலர் மூலம் உர்ஃபியைப் பார்க்கிறார்கள். காடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மிருகம் ஒன்று தென்படுவது போல் உர்ஃபியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உர்ஃபியின் இந்த தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவில் சிறுத்தை போன்று ஆடை அணிந்திருக்கும் உர்ஃபி, உள்ளாடை அணியவில்லை எனத் தெரிகிறது.