Vijay: இயக்குனர் அட்லீ வீட்டு விசேஷம்: கையில் பரிசுடன் நேரில் வந்து வாழ்த்திய விஜய்.!

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, தனது முதல் படத்திலேயே மெஹா ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார்.

தளபதியின் தம்பி என அழைக்கப்படும் அளவிற்கு விஜய் ரசிகர்களின் பேவரைட் இயக்குனர் லிஸ்டில் இன்றளவும் அட்லீ ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது ஹாலிவிட்டில் தடம் பதித்துள்ள இவர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரியா மணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘ஜவான்’ படத்தை ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். ஒரு கதாபாத்திரத்துடன் படம் முழுக்க வரும் வேடத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அட்லீ கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்தார். பிரியா சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்கு தங்கையாக நடித்தார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கிருஷ்ண பிரியா. அடிக்கடி வெளிநாடுளுக்கு சுற்றுலா செல்லும் அட்லீ மற்றும் பிரியா தங்களின் ரொமான்டிக் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வந்தனர்.

Kushboo: தைரியம் இருந்தா நேர்ல வா.. என் செருப்பு சைஸ் 41: நடிகை குஷ்பு ஆவேசம்.!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் அட்லீ, தான் அப்பாவாக போகும் தகவலை அறிவித்திருந்தார். எங்களின் குடும்பம் பெரிதாகிறது. நாங்கள் அப்பா அம்மா ஆகப்போகிறோம். எங்களுடைய இந்த பயணம் முழுவதற்கும் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும் தேவை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் அட்லீ.

Mysskin: உன் கால்களை முத்தமிடுகிறேன்: உருகிய இயக்குனர் மிஷ்கின்.!

இந்நிலையில் பிரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்வு நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இதில் திரையுலகினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு, அட்லி & பிரியாவுக்கு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.