அச்சுறுத்தும் கொரோனா: காங்கிரசை வறுத்தெடுத்த மத்திய அமைச்சர்.!

அண்டை நாடான சீனாவில், நாள்தோறும் நூற்றுக்கணக்காணோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் உலகநாடுகள் எச்சரிக்கை அடைந்துள்ளன. ஏற்கனவே கொரோனாவால் சரிந்த உலக பொருளாதாரம் தற்போது வரை மீளவில்லை.

அதேபோல் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அளவிடமுடியாதது. பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்குகள் விதிக்கப்பட்டதால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சரிந்துள்ளன. அதில் இருந்தே இன்னும் மீளாத நிலையில் தற்போது சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது உலகநாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரிபடைந்து வைரஸ் வேறு பரவி வருவதால், உலகமே சீனாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகாதரத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல்காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘‘மாஸ்க் மற்றும் சானிடைசர்களின் பயன்பாடு உள்ளிட்ட கோவிட் நெறிமுறைகளை அணிவகுப்பின் போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். இந்த கோவிட் நெறிமுறையைப் பின்பற்ற முடியாவிட்டால், பொது சுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டு, கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்ற, தேசிய நலன் கருதி ‘பாரத் ஜோடோ யாத்ரா’வை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. ‘இந்தியாவில் தற்போது கட்டாய முககவசம் ஆணை இல்லாததால், கடந்த ஆண்டு மற்ற கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளதால், என்ன நெறிமுறைகள் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். தயவுசெய்து கோவிட் நெறிமுறைகளை அறிவிக்கவும்; நாங்கள் அவற்றைப் பின்பற்றுவோம். சமூகவலைதளங்களில் ராகுல்காந்தியில் வீடியோக்கள் வைரலாகின்றன. சமூக வலைதளங்களில் ராகுல்காந்தி தான் பேசு பொருளாக உள்ளார். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதைக் கண்டு பாஜக அச்சப்படுகிறது. அதனால் தான் யாத்திரையை நிறுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது’ என காங்கிரஸ் பதில் அளித்துள்ளது. அதேபோல் கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் பாஜக யாத்திரை மேற்கொள்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாரா?” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ள்ளார்.

இந்தநிலையில் சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் குடும்பத்தை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ஒரு குடும்பம் தங்களை சட்டதிட்டங்களுக்கு மேலானவர்கள் என்று நினைப்பதால், சாத்தியமான கோவிட் பரவலைத் தடுக்கும் எனது கடமையை என்னால் புறக்கணிக்க முடியாது. இந்த நாட்டில் கொரோனா பரவக் கூடாது என்பது எனது கடமை.

உங்களால் தான் டிஜிட்டல் புரட்சி சாத்தியம்; பிரதமரை புகழ்ந்த சுந்தர்பிச்சை.!

யாத்திரையில் கலந்து கொண்ட சிலருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சல் முதல்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதே சிறந்த உதாரணம். எனவே நீங்கள் குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நாட்டின் விதிகளுக்கு கட்டுபட்டாகத்தான் வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.